Loading...
 

கார்ப்பரேட் கிளப்புகள்

 

 

RSI -இல் முதல் Agora கார்ப்பரேட் கிளப்பின் நிறுவனர் ஜோஸ் மானுவல் ரோபெரோ டாகுவா, 2019 சர்வதேச மாநாட்டில் தனது அனுபவம் குறித்து பேசுகிறார்.
RSI -இல் முதல் Agora கார்ப்பரேட் கிளப்பின் நிறுவனர் ஜோஸ் மானுவல் ரோபெரோ டாகுவா, 2019 சர்வதேச மாநாட்டில் தனது அனுபவம் குறித்து பேசுகிறார்.

 

உறுப்பினருரிமை

இன்னொரு நிறுவனத்தில் (வணிக ரீதியானதாகவோ அல்லது வணிக ரீதியல்லாததாகவோ இருக்கலாம்) செயல்படும் கிளப்புகள், இவை அந்த நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் அல்லது உறுப்பினர்களுக்கு மட்டுமேயானது.

ஃபவுண்டேஷன் உடைய மைய கொள்கைகள் அல்லது சட்டங்களுக்கு எதிரான செயல்பாடுகளில் இந்த கிளப்பை நடத்தும் (ஹோஸ்டிங் செய்யும்) நிறுவனம் ஈடுபடக்கூடாது. 

கார்ப்பரேட் கிளப்புகளில் வயது வரம்பு இருக்காது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "எக்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு இளைஞர் கிளப்" இருப்பது அனுமதிக்கப்பட்ட கிளப் வகை அல்ல. அதற்குப் பதிலாக  இந்தக் கிளப் பொது இளைஞர் கிளப்பாக அமைக்கப்பட வேண்டும்.

சந்திப்பு நடைபெறும் வளாகம்

கார்ப்பரேட் கிளப்புகள் அந்தக் கிளப்பை நடத்தும் நிறுவனத்தின் வளாகத்திலோ அல்லது அது வழங்கிய இடத்திலோ சந்திப்பை மேற்கொள்ள வேண்டும்.

விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள்

கார்ப்பரேட் கிளப்புகள் அதன் செயல்பாடுகளை தணிக்கை செய்வதற்கும், அது வழிகாட்டுதல்களை இணங்கி நடக்கிறதா என்பதை சோதிப்பதற்கும் மற்றும் வழிகாட்டும் நோக்கத்திற்காகவும் Agora Speakers International ஃபவுண்டேஷன் உடைய அதிகாரிகள் மற்றும் Agora Speakers International இயக்குநர்கள் குழு உறுப்பினர்களின் வருகையினை, வளாகத்தில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு அதனை ஏற்க வேண்டும்.

நிதி ரீதியான விதிமுறைகள்

கார்ப்பரேட் கிளப்புகள் தனது நிதி ரீதியான விஷயங்களை Agora Speakers International இடம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் அவை எது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறது அதை நிறுவனத்திற்குள்ளாகவே கையாளுகின்றன.

இருப்பினும், பொது கிளப்புகளைப் போலல்லாமல், கார்ப்பரேட் கிளப்புகள் Agora Speakers International இடம் பின்வருமாறு கட்டணம் செலுத்துகின்றன:

  • கிளப் அமைப்பு கட்டணமாக $100
  • உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஓராண்டு கட்டணமாக $50, கிளப்பில் 12 அல்லது அதற்கும் குறைவான உறுப்பினர்கள் இருந்தால் குறைந்தபட்சம் வருடாந்த கட்டணமாக $600

 

பட்டியல் ரீதியான விதிமுறைகள்

கார்ப்பரேட் கிளப்புகளைப் பற்றி பின்வரும் தகவல்கள் பகிரப்படுகின்றன, எனவே இவை கிளப் அதிகாரிகளால் புதுப்பித்த நிலையில் வைக்கப்பட வேண்டும்.

 

பகிரப்படும் கிளப் தகவல்
தகவல் வகை பகிரப்படும் விதம்
கிளப்பின் பெயர், எண் மற்றும் சாசன தேதி பொதுவில்
சந்திப்பு அட்டவணை Agora தூதர்கள் மற்றும் Agora ஃபவுண்டேஷன் அதிகாரிகள்
சந்திப்பு நடைபெறும் வளாகம் பொதுவில்
கிளப் அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு தகவல் Agora தூதர்கள் மற்றும் Agora ஃபவுண்டேஷன் அதிகாரிகள்
கட்டணம் அமைப்பு தனிப்பட்ட முறையில், Agora Speakers International உடைய மேற்பார்வை இல்லாமல்
கிளப் நிதிகள் தனிப்பட்ட முறையில், Agora Speakers International உடைய மேற்பார்வை இல்லாமல்
பார்வையிடுவதற்கான கட்டுப்பாடுகள் பொதுவில்
சொற்பொழிவு உள்ளடக்க கட்டுப்பாடுகள் பொதுவில்
கிளப்பின் தொடர்பு தகவல் பொதுவில்
விருதுகள் மற்றும் பதக்கங்கள் பொதுவில்
கிளப் மொழிகள் பொதுவில்
   

 

Agora கல்வி மாடலை கடைபிடிப்பது

கார்ப்பரேட் கிளப்புகள் அதனது திட்டத்தை அவற்றின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப வடிவமைத்துக் கொள்வதில் நிறைய சுதந்திரத்தை அனுபவிக்கின்றன. கோரினால், அவற்றுக்கு ஆர்வமுள்ள குறிப்பிட்ட தலைப்புகளையும், நிறுவனத்திற்கு தேவைப்படும் தலைப்புகளுடன் எங்களது பயிற்சி தலைப்புகளை இணைக்கும் கையேடுகள் இடம்பெறும் தழுவப்பட்ட கல்வித் திட்டம் ஒன்றை நாங்கள் வழங்குவோம்.

கார்ப்பரேட் கிளப்களில் நடைபெறும் சந்திப்புகளில் நேர வரையறை இல்லாத அல்லது மதிப்பீடு செய்யப்படாத பிரிவுகள் இடம்பெறலாம் (நாங்கள் அதை பரிந்துரைப்பதில்லை என்றாலும் கூட).

சொற்பொழிவுகளைப் பொறுத்தவரை, கிளப்பை நடத்தும் நிறுவனத்தின் வணிக இலக்குகளுடன் ஒருங்கிணைந்து சிறப்பாகச் செயல்பட கார்ப்பரேட் கிளப்புகள் அதிக சொற்பொழிவு உள்ளடக்கக் கட்டுப்பாடுகளை விதிக்க அனுமதிக்கப்படுகின்றன. செயல்பாடுகள், சொற்பொழிவுகள் அல்லது வகிக்கும் பாத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில், அவை நிலையான பட்டியலிலிருந்துதான் வர வேண்டும் என்கிற எந்தத் தேவைகளும் அவர்களுக்கு இல்லை.

கூடுதலாக, கார்ப்பரேட் கிளப்கள் தனது கல்வி ஆண்டினை தாங்கள் பொருத்தமாக கருதுகிறவாறு சுதந்திரமாக அமைத்துக் கொள்ளலாம் - வெவ்வேறு செயல்பாடுகளுக்கான குறைந்தபட்ச வருடாந்திர எண்ணிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லாமல் (உதாரணமாக, ஒரு கார்ப்பரேட் கிளப் தனக்கு விவாதங்கள் அல்லது பேச்சுவார்த்தைகள் அவசியமில்லை என்று கருதினால், ஆண்டு முழுவதும் அத்தகைய செயல்பாடுகளை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை).

இறுதியாக, கார்ப்பரேட் கிளப்களில் அனைத்து அதிகாரிகளும் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியமில்லை - சில அதிகாரிகள் அந்தக் கிளப்பை நடத்தும் நிறுவனத்தால் நியமிக்கப்படலாம். சில அதிகாரிகளை தேவையிருந்தால் மட்டும் அல்லது விருப்பத்தின் பேரில் நியமிக்கலாம்:

  • சமூக தலைமையின் துணைத் தலைவர்
  • பொருளாளர்
  • சமூக மேலாளர்

Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 15:01:08 CET by agora.